மதுரை, செப். 20 –
மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மொபைல் போன் விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் 11-ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் கண்காட்சி மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளரான தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் காணொளி வாயிலாக வருகை தந்து சிறப்புரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த சைபர் கிரைம் ஆய்வாளர் பாபு மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா கண் மருத்துவமனை நிறுவனர் மற்றும் மருத்துவர் Dr. சீனிவாசன் அகில இந்திய சங்கமான ஏம்ரா சங்கத்தின் தலைவர் விஸ்வநாதன் மாநில கௌரவ துணை தலைவர் சாகுல் ஹமீது மதுரை மொபைல் போன் விற்பனையாளர் சங்கத்தின் கௌரவத் தலைவர் சுலைமான் சுராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சிக்கு மொபைல் போன் இறக்குமதியாளர்கள் நிதி உதவி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மொபைல் போன் விற்பனையாளர்கள் சுமார் 600 க்கும் மேற்பட்டோர் வருகை புரிந்தனர். நிகழ்ச்சியில் முன்னதாக அஜ்மல்கான் வரவேற்புரை நடத்தினார். மொபைல் போன் விற்பனையாளர் நலச் சங்கத்தின் தலைவர் ஜோதி பாசு தலைமை உரை நிகழ்த்தி னார் அதனைத் தொடர்ந்து செயலாளர் சேக் அப்துல்லா சங்கம் கடந்து வந்த பாதை பற்றி எடுத்துக்கூறினார். பொருளாளர் தினேஷ் கார்த்திக் ஆண்ட றிக்கை நிதி பற்றி உரையாற்றினார். இணைச் செயலாளர் ராதா கிருஷ்ணன் அவர்கள் சங்கத்தின் அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்து உரையாற்றினார். அதனை தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் அகில இந்திய சங்கமான ஏம்ரா சங்கத்தின் மாநில நிர்வாகிகள் வியாபாரிகளின் தொழிலை எவ்வாறு மேம்படுத்துவது போன்ற நடைமுறைகளைப் பற்றி உரையாற்றினார்கள் மொபைல் போன்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் சார்ந்த கம்பெனி நிர்வாகிகள் நினைவு பரிசு வழங்கப்பட்டது மற்றும் நன்றி உரையினை முனைவர் அர்சத்முபின் நிகழ்த்தினார்.



