விழுப்புரம், ஜூலை 24 –
விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கல்லூரி சந்தை (College Bazar) கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேஷேக் அப்துல் ரஹ்மான் திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை கல்லூரிகளில் சந்தைப்படுத்துவதற்காக 5 கல்லூரியில் சந்தைகள் நடத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கல்லூரி சந்தை விற்பனை கண்காட்சி தெய்வானை அம்மாள் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இக்களர்காட்சியானது 22.07.2025 முதல் 24.07.2025 வரை 3 நாட்கள் நடைபெற்றது.