தென்தாமரைகுளம், ஆகஸ்ட் 12 –
பணகுடி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் குடும்பத்தினரையும், நண்பர்களையும் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் நீ. மாதவன், பேராசிரியர்கள், மாணவர் மாணவிகள் கலந்து கொண்டு போதைப் பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க உறுதிமொழி எடுத்தனர். இந்நிகழ்வை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் இரா. திலகா ஏற்பாடு செய்திருந்தார்.



