மார்த்தாண்டம், ஜூன் 28 –
பேச்சிப்பாறை அருகே வனப்பகுதி ஒட்டி உள்ள பழங்குடி குடியிருப்பு பகுதி மற்றும் ரப்பர் கழக தொழிலாளர் குடியிருப்புகளில் ஒற்றை யானை வந்து அட்டகாசம் செய்து வந்தது. இந்த நிலையில் ஜூன் 23 அன்று இரவு குற்றியாறு தொழிலாளர் குடியிருப்பிலுள்ள முத்து மாரியம்மன் கோவில் வளாகத்தில் புகுந்த யானை கூட்டம் கணபதி சன்னதியின் படிக்கட்டுகளை உடைத்ததுடன் அங்குள்ள அலுவலக கட்டடத்தின் கூரைகளை சேதப்படுத்தின. மேலும் அங்கு நின்ற தென்னை மரங்களையும் சேதப்படுத்தி உள்ளது. காலையில் வேலைக்கு வந்த தொழிலாளர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே ஒற்றை யானை அட்டகாசத்தில் ஈடுபட்ட வந்தது. தற்போது கூட்டமாக யானைகள் வந்த சம்பவம் அங்குள்ள தொழிலாளர்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. யானைகள் வராமல் நிரந்தர தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.