ஊத்தங்கரை, ஜூலை 25 –
திருவண்ணாமலை இருந்து பெங்களூர் செல்லும் பேருந்து வண்டி என் TN.25 N 0858 சாமல்பட்டி அருகே ஊருக்குள் செல்லாமல் பைபாஸ் வழியாக செல்வதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள். ஆடி அமாவாசையன்று திருவண்ணாமலை கோயிலுக்கு சென்று திரும்பும் பக்தர்களுக்கு பஸ் வசதி இல்லாமல் பெயர் பலகை இல்லாமல் பைபாஸ் வழியாக பஸ்கள் செல்கிறது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கண்டுகொள்ளாத அரசு போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை.