கோவை, ஜூலை 24 –
கோவை மாவட்டம் பீளமேடு ஃபன் மால் சாலை அருகில் உள்ள சவுரி பாளையம் வீட்டு வசதி வாரியம் அடுக்குமாடி குடியிருப்பு சங்க (பி.எஸ்.ஜி.ஹட்கோ) நிர்வாகிகளுடன் புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகள் கட்டுவது சம்பந்தமாக தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு. முத்துசாமி ஆலோசனை செய்தார்.
இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ, வி.சி. சந்திரகுமார் எம்எல்ஏ, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன், ராஜாராம், சண்முகம், பில்டர் பிரதாப், ஸ்ரீதர், வெங்கட்ராமன், சண்முகானந்தம், சவுரிபாளையம் ஹட்கோ அடுக்குமாடி (பி.எஸ்.ஜி.ஹட்கோ) குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.