பரமக்குடி, ஜூலை 11 –
பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஓமலூர் பாஜக ஒன்றிய செயலாளர் உட்பட மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 500 பேர் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். தமிழகம் முழுவதும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு என்ற இயக்கத்தினை தொடங்கிய தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் 30% புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். மேலும் அரசினுடைய திட்டங்களை பொதுமக்களுக்கு இடத்துரைக்க வேண்டும் என திட்டத்தினை துவக்கி வைத்தார். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் புதிய வாக்காளர் சேர்ப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக பரமக்குடியில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 500 பேர் இணையும் விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ தலைமை வகித்தார். முன்னதாக வடக்கு நகர் செயலாளர் ஜீவரத்தினம் வரவேற்றார். பரமக்குடி எம்எல்ஏ முருகேசன், முன்னாள் அமைச்சர்கள் சுந்தரராஜன், சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மண்டல பொறுப்பாளர் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில் போகலூர் பாஜக ஒன்றிய செயலாளர் பாலமுருகன் உள்ளிட்ட அதிமுக, தமிழக வெற்றி கழகம், நாம் தமிழர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட மாற்று கட்சியை சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் கருப்பையா, ஒன்றிய செயலாளர் குணசேகரன், கதிரவன், ஜெயக்குமார் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் குமரகுரு, நகர் தெற்கு மாணவர் அணி அமைப்பாளர் துரைமுருகன், மாவட்ட பிரதிநிதி கார்த்திக் பாண்டியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியில் தெற்கு நகர் செயலாளர் சேது கருணாநிதி கூறினார்.