பரமக்குடி, ஜூலை 9 –
பரமக்குடி அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா அரிமா ஆங்கில மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு அரிமா முன்னாள் பன்னாட்டு இயக்குநர் முத்துராஜ் நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட அரிமா கவர்னர் பொறியாளர் வி. ஜெகநாதன், அரிமா சங்க தலைவர் ஆர்.எம். இளங்குமரன், செயலாளர் எஸ்.வி. சுப்பையா, பொருளாளர் பி. தியாகராஜன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஆர். ரெங்கராஜன் அனைவரையும் வரவேற்றார்.
புதிய நிர்வாகிகளான தலைவர் எஸ். சரவணன், செயலாளர் ஆர். ரெங்கராஜன், பொருளாளர் என். சுப்பிரமணியன் ஆகியோருக்கு முன்னாள் பன்னாட்டு இயக்குநர் முத்துராஜ் நாகராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் 10, 11, 12 -ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயங்கள் வழங்கி பாராட்டப்பட்டனர். உயர் கல்விக்கு செல்லும் மாணவிக்கு கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது. நிர்வாகிகள் முகம்மது உமர், ஏ. ராமமூர்த்தி, டாக்டர் வரதராஜன், வி.எஸ்.என். கேசவன், மணிமாறன் மற்றும் நிர்வாகிகள், பிரமுகர்கள் கலந்து கொண்டனர். தலைவர் எஸ். சரவணன் ஏற்புரை வழங்கினார். பொருளாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.