பரமக்குடி, பிப். 26 –
பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் 25-வது பட்டமளிப்பு விழா வரும் மார்ச் 5 தேதி நடைபெறுகிறது. இது குறித்து கல்லூரியின் முதல்வர் ராஜா கூறுகையில்: கல்லூரியின் 25 வது பட்டமளிப்பு விழா மார்ச் 5 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை தியாகராய செட்டி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் பேராசிரியர் சக்திவேல் கலந்து கொண்டு பட்டம் வழங்குகிறார்.
ஆகையால், கடந்த 24-25 ஆம் ஆண்டில் மூன்றாம் ஆண்டு தேர்ச்சி பெற்று, பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறுவதற்காக விண்ணப்பித்துள்ள மாணவ மாணவிகள், பட்டமளிப்பு விழாவில் நேரடியாக கலந்து கொண்டு பட்டம் பெற விருப்பமுள்ளவர்கள், கல்லூரியின் கணிதத்துறை தலைவர் பேராசிரியர் அறிவழகன் அவர்களை தொடர்பு கொண்டு, பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.


