நாகர்கோவில், ஜூலை 12 –
குமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வைத்து மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கூடைப்பந்தாட்ட போட்டி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்தது. அதில் 19 வயதிற்கு உட்பட்ட மாணவர் பிரிவில் வெற்றி பெற்று முதல் பரிசை பெற்ற அணிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் குமரி மாவட்ட கூடைப்பந்தாட்ட கழக நிர்வாகி குமார் தேவராஜ் பதக்கம் மற்றும் கோப்பையை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து அண்ணா விளையாட்டரங்க நலச்சங்க செயலாளர் ஜெயின் ஷாஜி, மாஸ்டர்ஸ் இந்திய கூடைப்பந்து அணியின் வீராங்கனை பெமினா ஸ்டாலின், ஸ்காட் கிறிஸ்தவ பள்ளி தலைமை ஆசிரியர் பிறேம் ராஜ், தாளாளர் சசி, டதி பள்ளி தாளாளர் ஜெபசிங் ,விஜயகுமாரி கார்மல் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ், ஜெயா, பயிற்றுனர்கள் போட்டிகளை நடத்திய பீனிக்ஸ் 74 மற்றும் ஹிமாலயன் ஆக்ஸஸ் நிர்வாகிகள் மைக்கேல், பிரதீப், டேவிட், ரூஜன் ஆகியோர் போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவியருக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தனர்.