நாகர்கோவில், செப்டம்பர் 23 –
நாகர்கோவில் மாநகராட்சி 22-வது வார்டு பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் உள்ள பெதஸ்தா குளத்தினை சுற்றி ரூ.20.50 லட்சம் மதிப்பீட்டில் அலங்கார தரைக்கற்கள் பதித்து நடைபாதை, விளையாட்டு உபகரணங்கள், சுற்றுச்சுவர் மற்றும் அழகுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பணிகள் நிறைவடைந்த நிலையில் அதனை நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் திறந்து வைத்தார்.
மேலும் 4-வது வார்டு கிறிஸ்டோபர் நகரில் 3.50 லட்சம் மதிப்பீட்டில் பழுதுபட்டுள்ள மழை நீர் வடிகால் சீரமைப்பு பணியினையும் மேயர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் நிசாந்த் கிருஷ்ணா, மண்டல தலைவர்கள் ஜவகர், செல்வகுமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


