தருமபுரி, ஆகஸ்ட் 20 –
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் பழனி ஏற்பாட்டில் இண்டூரில் உள்ள விநாயகா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கே.பி. அன்பழகன் கலந்து கொண்டு தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் எழுச்சி பயணம் மேற்கொண்டு வரும் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தருமபுரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சட்டமன்ற தொகுதி வாரியாக பேசுகிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட செயலாளர் தலைமையில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி 50-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். இந்த கூட்டத்தில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.ஆர். வெற்றிவேல், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பழனிச்சாமி, மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர். அன்பழகன், மாநில மருத்துவ அணி இணை செயலாளர் அசோகன், நகரச் செயலாளர் பூக்கடை ரவி, நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவபிரகாசம் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், சார்பு அணிகளின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் திரளாக பங்கேற்றனர்.



