மார்த்தாண்டம், ஜூலை 5 –
நடைக்காவு ஊராட்சிக்குட்பட்ட மணிலி – பாத்திமா நகர் – பெருங்குளம் சாலை சீரமைத்து பல வருடங்கள் ஆகியதாலும் புயல் மற்றும் பெரும் கனமழையினாலும் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டது. இதனால் இந்த பழுதடைந்த சாலையை முன்னுரிமை வழங்கி சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்ததன் பேரில் மணிலி – பாத்திமா நகர் – பெருங்குளம் சாலையை சீரமைக்க ரூ. 1 கோடியே 20 லட்சத்து 21,356 நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து இன்று சாலை சீரமைக்கும் பணிகளை பாத்திமா நகர் பகுதியில் வைத்து தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முஞ்சிறை மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜயகுமார், நடைக்காவு ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெங்கின்ஸ், மாநில பொதுச்செயலாளர் பால்ராஜ், நடைக்காவு ஊராட்சி முன்னாள் தலைவர் கிறிஸ்டல் ஜாண், முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் லூயிஸ், முன்னாள் கவுன்சிலர் பாபு, சூழால் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இவான்ஸ், காங்கிரஸ் நிர்வாகிகள் சதீஷ், ஆமோஸ், குஞ்சன வில்சன் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.