தேனி, மே.12-
தேனி மாவட்டம் முத்தையன் செட்டியபட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் இப்பள்ளியில் மாணவர்கள் 100% சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
அந்த வகையில் 473 முதல் மதிப்பெண் பெற்ற நித்யஸ்ரீ மற்றும் கணித பாடத்தில் மூன்று மாணவர்கள் நூற்றுக்கு நூறு சதவீதம் பெற்றனர். முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கும் கணித பாடத்தில் 100 மதிப்பெண் பெற்ற மூன்று மாணவர்களுக்கும் பயிற்றுவித்த கணித ஆசிரியர் சுரேஷ்குமார் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் பயிற்றுவித்த ஆசிரியர் பெருமக்களுக்கும் தலைமை ஆசிரியர் பிரபு சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.