தென் தாமரைகுளம், ஜூன் 28 –
உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஜூன் 26 காலை குமரி சமூக விடியல் இயக்கம் சார்பில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் தென்தாமரைகுளம் பேரூராட்சி அலுவலகம் அருகில் இருந்து தொடங்கி நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு முடிவடைந்தது.
நிகழ்ச்சியின் தொடக்கமாக தென் தாமரை குளம் அரசு தொடக்கப்பள்ளி மாணவிகள் தமிழ் தாய் வாழ்த்து பாடினர். இயக்க துணைச் செயலாளர் டாக்டர் டி. டேனியல் தேவசுதன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். துணைத் தலைவர் முனைவர் ஜெயச்சந்திரன் வரவேற்று பேசினார். குமரி சமூக விடியல் இயக்க தலைவர் ராமசாமி தலைமை உரையாற்றினார். குமரி சமூகவிடியல் இயக்கத்தை சேர்ந்த பேராசிரியர் சச்சிதானந்தம், துணைத் தலைவர் சம்சுதீன், முனைவர் சேகர், முனைவர் ஏசுதாசன், செயலாளர் விஜய கங்காதரன், துணைச் செயலாளர் ஆபிரகாம், தென்தாமரைக்குளம் எல்.எம்.எஸ் மேல்நிலைப்பள்ளி தாளாளர் கால்வின், இயக்க பொருளாளர் பிரிட்டோ ஜெயசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குமரி சமூக விடியல் இயக்க செய்தி தொடர்பாளர் 1-வது வார்டு கவுன்சிலர் டி. கான்ஸ்டன் டைன் இயக்க உரையாற்றினார். தென்தாமரைகுளம் தூய பனிமய அன்னை ஆலய பங்கு தந்தை சுரேஷ், இயற்கை ஆர்வலர் சுதாமதி, டாக்டர் அரசு ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் தங்க முத்துநாடார், தங்கப்பன் ஆகியோர் உறுதிமொழி வாசித்தனர். தென் தாமரை குளம் பேரூராட்சி தலைவர் கார்த்திகா பிரதாப், இளம் சிறார் நீதி குழும உறுப்பினர் தங்க ஜெமிலா, தென் தாமரைகுளம் காவல் நிலைய சப்இன்ஸ்பெக்டர் குத்தாலிங்கம் ஆகியோர் ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு தீயணைப்பு (ம) மீட்பு பணிகள் துறையை சேர்ந்த அசோக்குமார், துணை பொருளாளர் சுந்தர்சிங் ஆகியோர் ஜோதி ஓட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தினர். குமரி சமூக விடியல் இயக்க ஒருங்கிணைப்பாளர் மைக்கேல்ராஜ் நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சியில் இயக்கத்தின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.