தென்காசி, ஆகஸ்ட் 5 –
தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்கள் அவர்களுடைய பொருட்களை பாதுகாப்பதற்கு பொருட்கள் பாதுகாக்கும் அறை வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரும் தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான பழனி நாடார் தன்னுடைய சொந்த நிதியில் இருந்து ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் பொருட்கள் பாதுகாக்கும் அறை கட்டுவதற்கான இடத்தை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் சந்தோஷ், நகர துணைத் தலைவர் தியாகராஜன், நகர பொருளாளர் ஈஸ்வரன், நகர்மன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.