தென்காசி, ஜூன் 30 –
தென்காசி மாவட்டம் தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு. ராணிஸ்ரீகுமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் , சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஆகியோர் முன்னிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்.
அதனைத் தொடர்ந்து தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற திறப்பு விழா மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு. ராணிஸ்ரீகுமார் , தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஆகியோர் முன்னிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் தென்காசி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் சேக் அப்துல்லா, மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதய கிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் கனிமொழி, தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் மற்றும் திமுக, காங்கிரஸ் கட்சியை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.