தூத்துக்குடி, ஜூன் 28 –
தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் ஜூன் 26 அன்று நடைபெற்றது. முகாமினை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். மேலும் உடனடியாக தீர்வுகள் காணப்பட்டவர்களுக்கு அதற்கான ஆணைகளை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில் தெற்கு மண்டலத்தில் உள்ள பகுதிகள் 2009ல் தூத்துக்குடி மாநகராட்சியில் இணைக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் எந்த பணிகளும் நடைபெறவில்லை. ஆனால் தற்போது அனைத்து பணிகளும் விரைவாக நடைபெற்று வருகிறது. மாநகராட்சியில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மக்கள் கோரிக்கைளை ஏற்று குறுகிய பகுதிகளில் கூட சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அனைத்து வார்டுகளிலும் எந்த வித பாரபட்சமும் இன்றி பணிகள் நடக்கிறது. விரைவில் தெற்கு மண்டலத்தில் மகளிர் பூங்கா, மதுகுடிப்போர் மறுவாழ்வு மையம் திறக்கப்பட உள்ளது. திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு முள்ளக்காடு வரையில் உள்ள சாலைகள் செப்பனிடப்பட்டு வருகிறது என்றார்.
முகாமில் துணை ஆணையர் சரவண குமார், கண்காணிப்பு பொறியாளர் தமிழ் செல்வன், துணை பொறியாளர் சரவணன், நகர்நல அதிகாரி சரோஜா, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், மண்டல தலைவர் பாலகுருசாமி, வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி செயலாளர் சுரேஷ்குமார், வட்ட செயலாளர் பிரசாந்த், மாமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், விஜயகுமார், சரவணகுமார், பச்சிராஜன், முத்துவேல், ராஜதுரை, வைதேகி உட்பட பலர் கலந்து கொண்டனர்.