கன்னியாகுமரி மே 1
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே சாலையோரம் கடை முன் தூங்கிக் கொண்டிருந்த மிட்டாய் வியாபாரியிடம் நள்ளிரவு செல்போன் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மணலிக்கரை பகுதியில் கிறிஸ்தவ ஆலயத்தில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் அமைக்கப்பட்டிருந்த மிட்டாய் கடையில் பணிபுரிந்த ஊழியர் இரவு கடை ஒன்றின் முன் உறங்கிக் கொண்டிருந்தார்.அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்கள் உறங்கிக் கொண்டிருந்த மிட்டாய் கடை ஊழியரின் செல்போன் மற்றும் பணத்தை திருடி சென்றதாக கூறப்படுகிறது.
மேலும், திருடிவிட்டு சென்ற இரண்டு நபர்களும் மீண்டும் திரும்பி வந்து சிறு கற்களை துணியில் கட்டி அவர் மீது தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.இது தொடர்பான காட்சிகள் அப்பகுதியில் இருந்த கடையின் சிசிடிவியில் பதிவாகி உள்ளது. தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.