திருவெண்ணெய்நல்லூர், ஜூலை 9 –
திருவெண்ணெய்நல்லூர் அருகே திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தடுத்தாட்கொண்டூர், மழையம்பட்டு ஆகிய கிராமங்களில் ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் திமுக உறுப்பினர் சேர்க்கை பணி நடைபெற்றது. இதற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் பி.வி.ஆர். விசுவநாதன் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மேன் ஓம் சிவசக்திவேல் முன்னிலை வகித்தார். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் நிர்மல்ராஜ் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளருமான பொன். கெளதம சிகாமணி வீடு, வீடாக சென்று செல்போன் செயலி மூலமாகவும் உறுப்பினர் படிவம் மூலமாகவும் புதிய உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டார்.
மேலும் அந்த கிராமத்தில் உள்ள குறைகளை கேட்டறிந்த அவர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதில் சடகோபன், மாதவன், ஏழுமலை, கிருஷ்ணராஜ், வெங்கடேசன், சுகுமார், கிளை செயலாளர்கள் ராம. பாபு, செல்லமுத்து, வாஞ்சிநாதன், எடிசன், காசிநாதன் அரி காத்தவராயன் மற்றும் இளைஞரணி விஜய், ராஜேஷ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.