திருப்பூர், செப். 24 –
தெற்கு சட்டமன்ற தொகுதி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் 52-வது வார்டு, கே.எம்.ஜி நகர் பகுதியில் ரூ.14.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம், 52-வது வார்டு, கே.எம்.ஜி நகர் பகுதியில் ரூ.12.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நியாயவிலைக்கடை, 52-வது வார்டு, அம்பேத்கர் நகர் பகுதியில் ரூ.14.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம், 55-வது வார்டு, பெரிச்சிபாளையம் பகுதியில் ரூ.13.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம், 44-வது வார்டு, செல்லப்பபுரம் பகுதியில் ரூ.14.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் ஆகிய ஐந்து புதிய கட்டிடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திருப்பூர் மத்திய மாவட்டக் கழக செயலாளர், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர்
க.செல்வராஜ் M.L.A., திறந்து வைத்தார். இந்நிகழ்வில் தெற்கு மாநகர செயலாளர்
டிகேடி மு.நாகராசன், பகுதி கழக செயலாளர்கள் மு.க.உசேன், தம்பி குமாரசாமி, மு.நந்தகோபால், மாவட்டத் துணைச் செயலாளர் நந்தினி,வட்டக் கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள் அங்கன்வாடி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



