திருப்பூர், ஆகஸ்ட் 06 –
உங்களுடன் ஸ்டாலின் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் மாநகராட்சி 2-வது மண்டலம் பூலுவபட்டி வி எஸ் மஹால், ஊத்துக்குளி வட்டாரம் சார்பாக சப்பட்ட நாயக்கன் பாளையத்தில் உள்ள சமுதாய கூடத்திலும், வட்டாலபதி தலப்பனங்காடு கருப்பராயன் கன்னியம்மாள் மண்டபத்திலும் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று மகளிர் உரிமைத்தொகை பட்டா சிட்டா பெயர் மாற்றுதல், வீட்டு வரி ரசீது பெயர் மாற்றுதல், முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுவாக எழுதி பொதுமக்கள் வழங்கினார்கள்.
இந்த நிகழ்வில் திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது மண்டல தலைவர் தம்பி ஆர் கோவிந்தராஜ், உதவி ஆணையாளர் சுந்தர்ராஜ், மண்டல உதவி ஆணையாளர் சக்திவேல், உதவி செயற்பொறியாளர் ஹரி, மாமன்ற உறுப்பினர்கள் லோகநாயகி, கருப்பசாமி, வேலம்மாள், விவிஜி காந்தி மாலதி, கேபிள் ராஜ், இளம் பொறியாளர்கள் வேல்முருகன், சண்முகசுந்தரம், ரமேஷ் குமார், சுஜாத் அலி, சுரேஷ்குமார், ராஜ்
ஊத்துக்குளி வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி, சரவணன், அ. பெரிய
பாளையம் முன்னாள் ஊராட்சி தலைவர் எஸ். துரைசாமி முன்னாள் வைஸ் அண்ணாதுரை ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் ஊர் பொது மக்களும் பெரும் திரளாக பங்கேற்றனர்.