திண்டுக்கல், ஆகஸ்ட் 7 –
திண்டுக்கல் ரோட்டரி சங்கம், திண்டுக்கல் இரத்த வங்கி இணைந்து குருதி வள்ளல் – 2025 விருது வழங்கும் விழா நிகழ்ச்சி திண்டுக்கல் – தாடிக்கொம்பு ரோட்டில் உள்ள வர்த்தகர் சங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் Rtn.M. மகேந்திரன் தலைமை தாங்கினார். திண்டுக்கல் இரத்த வங்கி நிர்வாகி
S. இளங்கோவன் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக CA Rtn.K. வெங்கட்ரமணன், மனிதம் போற்றும் சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனர் G. மணிபிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி அதிக முறை இரத்த தானம் செய்தவர்கள் Rtn.C. பாண்டியன், மணிவண்ணன் உட்பட 150 பேருக்கு கௌரவப்படுத்தும் விதமாக பொன்னாடை அணிவித்து விருது வழங்கி வாழ்த்தி பாராட்டினார்கள். இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் ரோட்டரி சங்கத்தின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் முடிவில் திண்டுக்கல் ரோட்டரி சங்கத்தின் செயலாளர் Rtn.P. மணிகண்டன் நன்றி கூறினார்.