திண்டுக்கல், ஜுன் 28 –
திண்டுக்கல்லில் மனிதநேய மக்கள் கட்சி நடத்திய இளைஞர் அணி மற்றும் சமூகநீதி மாணவர் இயக்கம் சார்பாக தலைமைச் செயற்குழு கூட்டம் திண்டுக்கல் மதினா பேலஸில் நடைபெற்றதில் மனிதநேயம் மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா MLA அவர்களுக்கும், பொதுச் செயலாளர் ப. அப்துல்சமது MLA அவர்களுக்கும், சமூக ஆர்வலர் நாட்டாண்மை Dr.Ln.N.M.B. காஜாமைதீன்
PMJF, DPE (USA) பூங்கொத்து கொடுத்து பொன்னாடை போர்த்தி புத்தகம் கொடுத்து மக்களுக்கு செய்யும் சேவைகளை பாராட்டி வாழ்த்தினார். இந்நிகழ்வில் துணை பொதுச்செயலாளர் மைதீன் சேட்கான், மாநில அமைப்பு செயலாளர்கள் S.A. ஷேக் முகமது அலி, பழனி M.I. பாரூக், தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தாக், மமக மாவட்ட துணைச்செயலாளர் சுலைமான் சுகைல் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஜமாத்அத்துல் உலமா, சபையின் செயலாளர் மெளலானா மெளலவி ஹாபிழ்
M. அப்துர்ரகுமான் யூஸீபி ஹழ்ரத், பொருளாளர் மெளலானா மெளலவி அல்ஹாஜ், B.நௌஷாத் அலி உலவி ஹழ்ரத், முத்தவல்லிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்புகளை மாவட்டத் தலைவர் K. ஷேக்பரீத், தமுமுக மாவட்ட துணை செயலாளர் M. யாசர் அராபத் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.