பூதப்பாண்டி, ஆகஸ்ட் 03 –
தமிழக காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைந்த அலுவலகம் திறப்பு விழா திட்டு விளையில் நடந்தது. விழாவிற்கு மாநில துணை தலைவர் சுபு கான் மற்றும் மாவட்ட தலைவர் முகமது ராபி ஆகியோர் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் எம் பி கலந்து கொண்டு புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார்.
பின்னர் திட்டு விளை ஜங்ஷனில் உள்ள பயணியர் நிழற்குடை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காமராஜர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து தொடர்ந்த அந்த பகுதியிலுள்ள தர்காவில் சிறப்பு பிரார்த்தனை செய்து அலுவலகத்தில் காங்கிரஸ் கொடியினை ஏற்றி வைத்து காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்களுக்கு நியமன சான்றுகள் வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் முகமது சாதீக் துணை தலைவர் முகமது ராபி. ஷேக் முகமது, வட்டார தலைவர் அயூப் கான் மற்றும் தோவாளை வட்டார (ேமற்கு) தலைவர் செல்வராஜ், துணை தலைவர் மரிய ஜான்சன், பென்சிங் பிராங்கிளின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.