தருமபுரி, ஆகஸ்ட் 9 –
தருமபுரி மேற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் அவசர ஆலோசனை கூட்டம் அவைத் தலைவர் மனோகரன் தலைமையில் காரிமங்கலத்தில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக முதலமைச்சருக்கு மாவட்ட திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது, 2026 சட்டமன்ற தேர்தலில் அரூர், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெறுவது, ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பணியில் அனைவரும் ஈடுபட்டு முழு அளவில் பணியை மேற்கொள்வது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பி. பழனியப்பன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி, சூடப்பட்டி சுப்பிரமணி மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.