திருப்பூர், ஜூலை 28 –
திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், திருப்பூர் மாவட்ட டூரிஸ்ட் வேன், கார், ஆட்டோ ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் திருப்பூர் தி ஐ பவுண்டேஷன் மற்றும் ஸ்ரீ சரண் மெடிக்கல் சென்டர் இணைந்து 3-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தமிழக அரசின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் இன்று பாண்டியன் நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இந்த முகாமினை திருப்பூர் மேயர் தினேஷ்குமார் துவக்கி வைத்தார். திமுக வடக்கு மாநகர பொறுப்பாளர் தங்கராஜ், மாநகரத் துணைச் செயலாளர் ராமசாமி, திருமுருகன்பூண்டி காவல் ஆய்வாளர் இளங்கோ கவுன்சிலர்கள் மாலதி கேபிள் ராஜ், லோகநாயகி கருப்பசாமி, வார்டு செயலாளர் செந்தில், மருத்துவர்கள் சிவ ரூபேஷ், சரவணகுமார், ஹேமலதா, தர்ஷனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த முகாமில் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ பரிசோதனை, இலவச மருத்துவ ஆலோசனைகள், கண் பரிசோதனை, சர்க்கரை நோய், காய்ச்சல், தலைவலி, உடல் வலி, குழந்தைகளுக்கு பொதுவான உடல்நல பிரச்சனைகள், பெண்களுக்கு இரத்த சோகை, கர்ப்பப்பை கட்டி மற்றும் சிறுநீர் கழிப்பதில் சிக்கல், கல் அடைப்பு, வயிறு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கப்பட்டது. மேலும் கண் புரை அறுவை சிகிச்சை தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக கண் புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
முகாமில் நிறுவனத் தலைவர் பெஸ்ட் சண்முகவேல், செயலாளர் சேகர், பொருளாளர் துர்கா ராம், துணைத் தலைவர் சதாசிவம், துணைப் பொருளாளர் மயில்சாமி, துணைச் செயலாளர் நிவாஸ், ஒருங்கிணைப்பாளர் நம்பிராஜ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சுரேஷ், குமார், செல்வம் ராஜமாணிக்கம், ரங்கராஜ், மணிகண்டன், சிவாஜி, அமீர் மைதீன், ராஜன், ரஞ்சித், மைக்கேல் ராஜ், தங்கதுரை மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், பாண்டி நகர் கிளை சார்பாக கலந்து கொண்டனர்.