தஞ்சாவூர், ஆகஸ்ட் 18 –
தஞ்சாவூர் அடுத்துள்ள அருள்மிகு புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் சாமி தரிசனம் செய்ததுடன் பொது விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பொது விருந்து நிகழ்ச்சியில் தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ச. முரசொலி, தஞ்சாவூர் சட்டப்பேரவை உறுப்பினர் டிகேஜி நீலமேகம், மேயர் சண் ராமநாதன், வேளாண்மை இணை இயக்குனர் வித்யா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சீதாராமன், இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் கவிதா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



