தஞ்சாவூர், ஆகஸ்ட் 1 –
தூத்துக்குடி பொறியாளர் கவின் செல்வ கணேஷ் ஜாதி ஆணவ படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் அருகே தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கவின் செல்வ கணேஷ் ஜாதி ஆணவ படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், தமிழ்நாடு அரசு ஜாதி ஆணவ படுகொலைக்கு எதிராக தனி சட்டம் இயற்ற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் கலைச்செல்வி, பொருளாளர் சத்தியநாதன், முன்னாள் மாவட்ட செயலர் சிவகுரு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மனோகரன், சரவணன், மூத்த நிர்வாகிகள் பழனிவேல், சீனிவாசன், மாநகர செயலாளர் வடிவேலன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில துணை பொது செயலாளர் களப்பிரன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் பிரதீப் ராஜ்குமார், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் சேகர், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நல குழு மாவட்ட செயலாளர் குருசாமி, இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளர் துரை. மதிவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.