சென்னை, ஜூலை 17 –
சென்னை சைதாப்பேட்டை 140 வார்டு ரெட்டிகுப்பம் ரோடு, கோடம்பாக்கம் ரோடு ஆகிய பகுதிகளில் ரூ.3 கோடி 55 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் கால்வாய் அமைக்கும் திட்ட பணிகளுக்கான தொடக்க விழா நிகழ்ச்சி சென்னை சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதை அருகில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், 10 வது மண்டல குழுத் தலைவர் எம். கிருஷ்ணமூர்த்தி, 140-வது வார்டு மாமன்ற உறுப்பினர் எம். ஸ்ரீதரன் மற்றும் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலர்கள், திமுக கட்சியின் மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.