கோவை, ஜூலை 11 –
கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் பேரூராட்சி ஏழாவது வார்டில் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து முழுநேர நியாய விலை கடை கட்ட 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்பணினை சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. கந்தசாமி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கண்ணம்பாளையம் பேரூராட்சி தலைவர் புஷ்பலதா ராஜகோபால், வார்டு கவுன்சிலர் பத்மநாதன், சூலூர் அதிமுக ஒன்றிய கழக செயலாளர்கள் கோ. குமாரவேல், வி.பி. கந்தவேல், அதிமுக ஒன்றிய அவைத்தலைவர், துணை செயலாளர்கள் ஏ.பி. அண்ணன் அங்கமுத்து நகர கழக செயலாளர்கள் கண்ணம்பாளையம் சிவக்குமார், பள்ளபாளையம் வி.கே. சண்முகம், காடம்பாடி வினோத்குமார், மீனவராணி, எஸ்.ஏ. ஆறுமுகம் உட்பட அப்பகுதி பொதுமக்களும் கலந்து கொண்டனர்.