சிவகங்கை, ஜூலை 10 –
சிவகங்கை நகர் 21-வது வார்டில் அருள்மிகு ஶ்ரீ பிள்ளைவயல் காளியம்மன் கோவில் பூச்சொறிதல் விழா இன்னும் ஓரிரு நாட்களில் நடைபெறவுள்ளது. சிவகங்கை நகரின் முக்கிய கோவில்களில் ஒன்றான இக்கோவிலின் பூச்சொறிதல் திருவிழாவானது மிகவும் பிரசித்தி பெற்றதாகவும் அதே வேளையில் பக்தர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் வருடா வருடம் கூடுகின்றனர். பக்தர்கள் நலன்கருதி கோவில் வளாக அருகில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ரூபாய் 8.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டுள்ள நிலையில் சிவகங்கை நகர்மன்றத் தலைவரும் நகர்க்கழக திமுக செயலாளருமான சி.எம். துரை ஆனந்த் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் 21-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர், சிவகங்கை மாவட்ட திமுக செய்தித்தொடர்பாளர் அயூப்கான், நகர் மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன், சி.எல். சரவணன், ராமதாஸ், பிள்ளைவயல் குடியிருப்பு நலச்சங்கம் சேதுபதி, கர்ணன், சுப்பிரமணியன், நகர் திமுக சண்முகம், நகராட்சி இணைப்பொறியாளர், பீட்டர், பொறியாளர் பிரிவு அய்யப்பன் மற்றும் 21-வது வார்டு உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.