கிருஷ்ணகிரி, செப். 11 –
கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தூர் அருகே உள்ள பூனையம்பேட்டை அருள்மிகு ஶ்ரீ முனியப்பன் திருக்கோயில் ஆலய நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா கடந்த 3 ஆம் தேதி அதிகாலை மங்கள விநாயகர் பூஜை மற்றும் கொடியேற்றுத்துடன் நடந்தது. அதனை தொடர்ந்து கங்கணம் கட்டுதல், முளைப்பாரி எடுத்தல் மற்றும் மஹா கணபதி ஹோமம், நவசக்திஹோமம், கோபூஜை, தீபாரதனை உள்ளிட்டவைகள் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து இன்று காலை மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதனை கோவில் பூசாரி பீமன் தலைமையில் ஸ்ரீ முனியப்பன் கோவில் மீது புனித நீர் தெளித்து மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பூசாரி பீமன் அருவாள் மீது ஏறி நின்று சாமி வந்து ஆடியபடியே பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினார்.
பின்னர் அங்குள்ள பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவில் பங்கேற்ற முக்கியஸ்தர்களுக்கு சிறப்பு செய்து விழாவை சிறப்பித்தனர்.



