திருவட்டார், ஜூன் 28 –
கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் நலன், சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் கொல்வேல் மவுண்ட் கார்மல் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய உலக போதைப்பொருள் தடுப்பு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு தின ஜோதி ஓட்டம் கொல்வேலில் துவங்கியது. கொல்வேல் பங்கு பணியாளர் ஜாண் சேவியர் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியை அமலா ராணி, கல்விக்குழு உறுப்பினர்கள் கிறிஸ்துதாஸ், ஜெபனேசர், துரைராஜ், ஸ்டான்லி, டெல்பின் புஷ்பலதா, தி.மு.க. நிர்வாகி எல்ஜின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவி பெபி ஜெல்ஸியா வரவேற்றார். திருவட்டார் பேரூராட்சி தலைவர் பெனிலா ரமேஷ் கொடியசைக்க போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் தீபம் ஏற்றி ஜோதி ஓட்டத்தை துவங்கி வைத்தார். போதைக்கு எதிராக பதாகைகளுடன் மாணவர்கள் கோஷம் எழுப்பினர். கொல்வேலில் துவங்கிய ஜோதி ஓட்டம் திருவட்டார், தக்கலை வழியாக நாகர்கோவிலை சென்றடைந்தது.