தக்கலை, ஜூலை 12 –
கொற்றிக்கோடு அருகே மணலிக்கரை பகுதியை சேர்ந்தவர் மோகன் தாஸ் (61). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது உறவினர் குமார் தாஸ் என்பவர் மோகன் தாசை அடிக்கடி சென்று கவனித்து வருவது வழக்கம். கடந்த சில நாட்களாக பலமுறை தொடர்பு கொண்டும் மோகன் தோசை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதையடுத்து நேற்று உறவினர் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மோகன் தாஸ் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அவர் வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இது குறித்து தக்கலை போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.