கரூர் மாவட்டம் – மே – 13
குளித்தலை அருகே கொம்பாடிப்பட்டியில் பகவதியம்மன், பூனாட்சியம்மன் கோவில் திருவிழாவினை முன்னிட்டு குட்டி குடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கொம்பாடிப்பட்டியில் ஸ்ரீ பகவதியம்மன், பூனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பூனாட்சியம்மன் குட்டி குடித்தல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. முன்னதாக கடந்த மே 10ம் தேதி பகவதியம்மனுக்கு கரகம் பாலிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று பூனாட்சி அம்மன் குட்டி குடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அருள் வந்த மருலாளி மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து கோவில் அருகே ஆட்டு குட்டியின் ரத்தம் குடித்தார். வேண்டுதல் நிறைவேறிய சுமார் 30க்கும் மேற்பட்ட பக்தர்கள் அனைவரும் ஆட்டு குட்டியினை அம்மனுக்கு குட்டி குடிக்க காணிக்கையாக கொடுத்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.



