சுசீந்திரம், ஆகஸ்ட் 3 –
சுசீந்திரம் அருகே உள்ள பறக்கை கக்கன் புதூர் பகுதியைச் சார்ந்தவர் வேல்முருகன் (55). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு கல்லீரல் மற்றும் கிட்னி பாதிக்கப்பட்டு மன உளைச்சலில் இருந்தவர் தான் அடிக்கடி தற்கொலை செய்து கொள்வதாக கூறி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று ஏதோ விஷம் அருந்தி வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரது மனைவி ஈஸ்வரி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சையில் சேர்த்தார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் பரிதாபமாக நேற்று உயிர் இழந்தார்.
இது குறித்து அவரது மனைவி ஈஸ்வரி சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சுசீந்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.