மார்த்தாண்டம், ஆக. 11 –
குழித்துறையில் நகராட்சியின் பராமரிப்பில் நடத்தப்படும் விஎல்சி திருமண மண்டபம் உள்ளது. இந்த மண்டபம் தற்போது பழுதடைந்த நிலையில் உள்ளது. இதை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து திருமண மண்டபத்தை நவீன முறையில் மறு சீரமைப்பு செய்ய தமிழக அரசு ரூ. 6 கோடியே 65 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதன் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. அமைச்சர் மனோ தங்கராஜ் அடிக்கல் நாட்டினார். குழித்துறை நகராட்சி தலைவர் பொன் ஆசைதம்பி, மாநில உணவு ஆணைய தலைவர் சுரேஷ் ராஜன், விளவங்கோடு எம்எல்ஏ தாரகை கத்பட் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



