மதுரை மாவட்டம் சக்குடி அருகில் உள்ள திருமணப்பதி கிராமத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கருப்பாயூரணி கிழக்கு வட்டாரத் தலைவர் அன்புச் செல்வம் குழந்தைகளின் காதணி விழாவில் தமாகா தலைவர் ஜி கே வாசன் எம்பி பங்கேற்றார்.
இந்த விழாவில் பங்கேற்க வருகை புரிந்த கட்சித் தலைவர் ஜிகே வாசன் எம்பிக்கு
மதுரை வடக்கு மாவட்ட தலைவர் தனுஷ்கோடி தெற்கு மாவட்ட தலைவர் பி.காந்தி சிவகங்கை மாவட்ட தலைவர் மற்றும் திருப்புவனம் முன்னாள் சேர்மன் கேகே.பாலசுப்ரமணியம் மற்றும் மாநில பொதுச் செயலாளர்கள் முன்னாள் எம்பி உடையப்பன், பழனிவேல், மாநில நிர்வாகிகள் வழக்கறிஞர் பாரத் நாச்சியப்பன் சே.பிரேம் குமார் மற்றும் ஒத்தக்கடை ஜெயப்பிரகாஷ் ஆகியோர் உட்பட மாநில மாவட்ட நிர்வாகிகள் எம்பிக்கு உற்சாக வரவேற்பு அளித்து விழாவிற்கு அழைத்து வந்தனர்.
அதனைத் தொடர்ந்து விழாவில் பங்கேற்ற தமாகா தலைவர் ஜி கே வாசன் எம்பி குழந்தைச் செல்வங்களை ஆசீர்வதித்து வட்டாரத் தலைவர் குடும்பத்தாருக்கும் அவரது உறவினர்களுக்கும் வாழ்த்து கூறினார்.
முன்னதாக விழாவில் பங்கேற்ற தலைவருக்கு தமாகா மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு உற்சாக வரவேற்பளித்தனர்.