குளச்சல், ஜூலை 18 –
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் லியோன் நகரை சேர்ந்தவர் சுதாலிஸ் (வயது 50) மீனவர். தற்போது மேற்கு கடற்கரை பகுதியில் மீன் பிடி தடைகாலம் என்பதால் விசைப்படகுகளை பராமரிக்கும் பணியில் சுதாலிஸ் ஈடுபட்டு வந்தார். சுதாலிஸ் நேற்று மாலை படகு பராமரிப்பு பணி முடிந்து வீட்டிற்கு வந்து குளியல் அறைக்கு சென்றார். அப்போது திடீரென வழுக்கி விழுந்த சத்தம் கேட்டு அவரது மனைவி சத்தம் போட அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் குளியல் அறை கதவை உடைத்து பார்த்த போது சுதாலிஸ் பலத்த காயம் அடைந்து மயக்க நிலையில் கிடந்தார்.
உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக குளச்சல் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் சுதாலிஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ள மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.