வாடிப்பட்டி, ஜூலை 22 –
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டையில் பழமையும் பெருமையும் வாய்ந்த குலசேகர பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் எழுந்தருளி அருள் பாலிக்கும் கால பைரவருக்கு தேய் பிறை அஷ்டமி திதியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை அர்ச்சனை செய்யப்பட்டது.
இந்த பூஜையினை கோவில்பட்டர் கிருஷ்ணமூர்த்தி செய்தார். இதில் ஏராளமான கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.