கருங்கல், ஜூலை 14 –
கிள்ளியூர் வட்டத்துக்குட்பட்ட திப்பிறமலை, கண்ணன்விளை பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் வீடுகளுக்கு தன்னார்வலர்கள் நேரில் சென்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட விண்ணப்பங்கள் வழங்கி வருகின்றனர். இதை நேற்று 13-ம் தேதி கலெக்டர் அழகு மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் பொதுமக்களிடம் அவர்களுடைய தேவைகள் குறித்து கேட்டறியப்பட்டதோடு நடைபெறவுள்ள முகாமிற்கு தவறாமல் கலந்துகொண்டு பயன்பெறுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். உடன் கிள்ளியூர் வட்டாட்சியர் ராஜசேகர், தன்னார்வலர்கள், சமுதாய வள பயிற்றுனர்கள், இல்லம்தேடி கல்வி பணியாளர்கள், சுயஉதவிக்குழுவினர், களப்பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.