தூத்துக்குடி, ஆக. 07 –
தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ. கீதா ஜீவன் அவர்களின் ஆலோசனையின் படி கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி, கயத்தாறு தாலுகாவில் அமைந்துள்ள மாவட்ட கவுன்சிலர் அலுவலகத்தில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாளான இன்று மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் தலைமையில் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் கயத்தாறு ஒன்றிய திமுக இளைஞர் அணி மணிகண்டன், திருமங்கலம் குறிச்சி பரமசிவம், தெற்கு இலந்தகுளம் திமுக கிளை கழக செயலாளர் ஆறுமுகம், ராஜா புதுக்குடி பால்ராஜ், சதீஷ்குமார், ஆத்திகுளம் திமுக கிளை செயலாளர் சந்திரன், கம்மாபட்டி திமுக கிளை செயலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.