திருப்பத்தூர், ஆகஸ்ட் 3 –
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட எலவம்பட்டி, கொரட்டி ஊராட்சிகளுக்கு கொரட்டியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ. நல்லதம்பி பங்கேற்று மருத்துவ காப்பீடு, வேளாண்மை துறை, ஆதார் திருத்தம் செய்ய மனு கொடுத்த பயனாளிகளுக்கு பரிசீலனை செய்து அடையாள அட்டைகளை வழங்கினார். இந்நிகழ்வில் எலவம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மேனகா விவேகானந்தன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
ஒன்றிய செயலாளர் மாவட்ட கவுன்சிலர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் குணசேகரன், ஒன்றிய குழு பெருந்தலைவர் திருமதி திருமுருகன் ஆகியோர் முகாமின் நோக்கம், பொதுமக்களுக்கு மகளிர் உரிமை திட்டம் மற்றும் அனைத்து துறை சார்ந்த திட்டங்களை விளக்கி பேசினார்கள்.
இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி AD (ஆடிட்) குமார், அலுவலர் சதானந்தம், கொரட்டி ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி கார்த்திகேயன், சின்னாரம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஆசிரியர் சன்முகம், தோரனம்பதி ஊராட்சி மன்ற தலைவர் நித்யானந்தம், எலவம்பட்டி ஒன்றிய கவுன்சிலர் சன்முகபிரியா கமலநாதன், ஒன்றிய குழு துணை தலைவர் மோகன்குமார், ஒன்றிய கழக செயலாளர்கள் முருகேசன், மோகன்ராஜ், மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணி, முன்னாள் நகர மன்ற தலைவர் அரசு, ஒன்றிய துணை செயலாளர் தீபா, ஒன்றிய கவுன்சிலர் சக்கரை, அதியூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் பழனிவேல், எலவம்பட்டி ஊராட்சி மன்ற துணை தலைவர் ஆனந்தன், விளையாட்டு மேம்பாட்டு அணி சுகுமார், முன்னாள் மாணவரணி அமைப்பாளர் சுரேஷ், இளைஞரணி அமைப்பாளர் தமிழ் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.
மேலும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து 1000 மனுக்களை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியின் இறுதியில் கொரட்டி ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி கார்த்திகேயன் நன்றியுரை வழங்கினார்.