கோவை: மே 15
ஆனைமலை அரசு மகளிர் மேனிலைப்பள்ளியில் படித்த பா.சபிதா ஜாஸ்மின் மற்றும் பா.சுபிதா யாஸ்மின் இருவரும் +2 தேர்வில் ஒரே மதிப்பெண் 515 / 600 எடுத்த மாநில அளவில் முதல் இரட்டை சகோதரிகள் என்ற சாதனையை படைத்துள்ளனர். இவர்களது இளைய சகோதரி சன்ஃபியா பாத்திமா இதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார் . இவரது பெற்றோர்கள் பாபா மைதீன், பர்ஜானா இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகள் இருவருக்கும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் பொதுமக்கள் அனைவரும் வாழ்த்தி வருகின்றனர்.