எட்டயபுரம், ஜூலை 19 –
எட்டயபுரம் பேரூராட்சி வார்டு எண் 1-முதல் 8- வரை உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் எட்டையாபுரம் பேரூராட்சி அலுவலக நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V. மார்கண்டேயன் அவர்கள் துவக்கி வைத்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
இந்நிகழ்வில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி, எட்டையபுரம் வட்டாட்சியர் சுபா, எட்டையபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் மகாராஜன், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் சரவணன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கர நாராயணன், எட்டையபுரம் பேரூர் கழகச் செயலாளர் பாரதிகணேசன், எட்டையபுரம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கதிர்வேல், மாவட்ட பிரதிநிதி கல்லடிவீரன், வடக்கு மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சங்கர நாராயணன், வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் எம்.ஆர். முனியசாமி, வடக்கு மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ஆகாஷ் பாண்டியன், பேரூர் கழகத் துணைச் செயலாளர்கள் முத்து முனியசாமி, மாரியப்பன், வார்டு உறுப்பினர்கள் ராமர், மணிகண்டன், குமார், மாதவன், விஜயலட்சுமி, முத்துக்குமார், வார்டு செயலாளர்கள் அருள் சுந்தர், சின்னப்பர் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் வெள்ளத்துரை, ஒன்றிய அயலக அணி அமைப்பாளர் ராமமூர்த்தி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சுரேஷ், கிளைச் செயலாளர்கள் வைரம், மாடசாமி உள்ளிட்ட பொதுமக்கள், துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.