கிருஷ்ணகிரி, செப். 23 –
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அனுமன் தீர்த்தத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் வீட்டின் முன் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை வாலிபர் திருடிய போது அவரை கையும் களவுமாக பிடித்து ஊத்தங்கரை போலீசில் ஒப்படைத்தார். விசாரித்ததில் தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த தண்ட குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராஜா மகன் கவின் என்கிற கிஷோர் (19) என தெரிய வந்தது. விஜயகுமார் ஊத்தங்கரை போலீஸ்சில் கொடுத்த புகாரின் பேரில் கவினை கைது செய்து தருமபுரி சிறையில் அடைத்தனர்.



