புதூர், ஜூலை 29 –
தமிழகம் முழுவதும் தமிழக அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் என்னும் சிறப்பு முகாம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வருவாய்த்துறை, ஊராட்சித்துறை, மருத்துவத்துறை, காவல்துறை, மின்வாரியத்துதுறை உள்ளிட்ட அரசின் அனைத்து துறை அடங்கிய முகாம் அமைக்கப்பட்டு பட்டாவில் பெயர் மாற்றம், வாரிசு சான்றிதழ், குடிநீர் இணைப்பு, தொழில் வரி விதிப்பு, மின் இணைப்பு, ஆதார் அட்டை திருத்தம், முதியோர் உதவித்தொகை, தெருவோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை, இலவச பட்டா மனை வழங்குதல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் பேரூராட்சி பகுதியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன் துவக்கி வைத்து பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்தார். அப்போது மின்வாரியத்தில் இணைய வழி மூலமாக பெயர் மாற்றம் செய்த பயனாளி ஒருவருக்கும், வருவாய் துறை சார்பில் ஜாதி சான்றிதழ் பதிவேற்றம் செய்தவருக்கும் உடனே உத்தரவு மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு இலவச ஊட்டசத்து பெட்டகத்தையும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் வழங்கினார்.
நிகழ்வில் விளாத்திகுளம் வட்டாட்சியர் கண்ணன், புதூர் பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், ராதாகிருஷ்ணன், அன்புராஜன், இம்மானுவேல், புதூர் பேரூர் கழக செயலாளர் மருது பாண்டியன், வார்டு உறுப்பினர் வெற்றிவேல் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உட்பட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.