இரணியல், ஜுலை 5 –
இரணியலில் மிகவும் தொன்மை வாய்ந்த மன்னர் கால அரண்மனை ஒன்று உள்ளது. இந்த அரண்மனையை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து தமிழக அரசு ரூ.4.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பழைமை மாறாமல் புதுப்பித்திடும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது.
இரணியல் அரண்மனையில் பழுதுபட்ட மின் இணைப்புகளை மாற்றி புதிய மின் இணைப்பு வேலைகள், பழுது பார்த்தல், பராமரிப்பு வேலைகள், சுவர் பழுதுபட்டுள்ளதனை மாற்றி திரும்ப கட்டுதல் பணி, மர சீலிங் வேலைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா நேற்று நேரில் பார்வையிட்டார். பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.



