மதுரை, ஜூலை 28 –
மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகே உள்ள மைதானத்தில் தமிழக இடைநிலை ஆசிரியர்கள் ஒரு நாள் அடையாள போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பேசியதாவது: ஆசிரியர்களின் கடை நிலை ஊழியர்கள் ஊதியம் குறைவாகவும் ஒரே பணி ஒரே கல்வி ஒரே பதவி இருந்தும் ஒரே விதமான ஊதியம் வழங்காததை கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெறுகிறது.
மேலும் தமிழக அரசு அறிவித்திருந்த சுமார் 20,000 க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு சம ஊதியத்தை வழங்காததை கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஆயத்தப்படும் விதத்தில் இந்த ஒரு நாள் உண்ணவிரதப் போராட்டம் நடைபெறுகிறது என்று பேசினர். இந்த நிகழ்வின் போது பொறுப்பாளர்கள் ரெக்ஸ் ஆனந்தகுமார், ராபர்ட் கண்ணன், ஞானசேகரன், வேல்முருகன் மற்றும் ஆசிரியர்கள் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.